×

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி

சீர்காழி, அக்.20: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர்கோயிலில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சீர்காழி அருகே திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் நவகிரகங்களில் ஒன்றான புதன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். இக்கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சந்திர தீர்த்த குளத்தில் அஸ்திர தேவருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். முன்னதாக சுவேதாரண்யேஸ்வரர் வித்யாம்பிகை அம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags : Tirthavari ,Thiruvenkadu Swetharanyeswarar Temple ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில்...