×

பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டம்

கரூர், அக். 20: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கரூர் நகரம் மற்றும் தாந்தோணி ஒன்றியக்குழு சார்பில் கோரிக்கை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு நகர செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராமச்சந்திரன், பாரதிதாசன், நிர்மல்ராஜ், ரம்யா, ஏஐசிசிடியூ மாவட்ட செயலாளர் பால்ராஜ் உட்பட அனைத்து நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். வீட்டு மனை இல்லாத அனைவருக்கும் வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். வீட்டு மனைப்பட்டா உள்ளவர்களுக்கு இலவசமாக வீடு கட்டித் தர வேண்டும். குடியிருப்பு வாரியத்தால் கட்டப்பட்டுள்ள 2400 வீடுகளையும், வீடில்லாதவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும். மகளிர் சுய நிதி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறிது நேரம் கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து இதே கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை, கோட்டாட்சியர் பாலசுப்ரமணியத்திடம் வழங்கி சென்றனர்.

Tags : Communist Party ,
× RELATED டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு...