×

அக். 25ல் ஆயுத பூஜை கொண்டாட்டம் தாந்தோணிமலை பகுதியில் பூசணி விற்பனை தீவிரம்


கரூர், அக். 20: கரூர் மாவட்டம் தொழில் நகரமாக உள்ளது. குறிப்பாக கரூர் நகரப்பகுதியில்தான் டெக்ஸ்டைல்ஸ், பஸ்பாடி, கொசுவலை போன்ற முக்கிய நிறுவனங்கள் உள்ளன. ஆண்டுதோறும் ஆயுதபூஜை விழா மற்ற மாவட்டங்களை காட்டிலும் கரூர் மாவட்டத்தில் அதிகளவு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக, பல்வேறு பண்டிகைகள் சரிவர நடைபெறாத நிலையில் ஆயுதபூஜை விழா வரும் 25ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
ஆயுதபூஜையின் போது, நீர்ப்பூசணியை திருஷ்டிக்காக வைத்து கும்பிட்டு விட்டு சாலையில் உடைப்பது வழக்கம் என்பதால் தற்போது நீர்ப்பூசணிக்காய் விற்பனை நடைபெற துவங்கியுள்ளது. கரூர் மாவட்டத்தில் ஈசநத்தம், பாகநத்தம், வெள்ளியணை போன்ற பகுதிகளில் பரவலாக நீர்ப்பூசணி விளைவிக்கப்படுகிறது. ஆயுதபூஜைக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ளதால் நீர்ப்பூசணிக்காய் விற்பனை செய்யும் நோக்கில் குவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் ஒரு கிலோ ரூ.15 என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

Tags : celebrations ,Armed Puja ,area ,Dhanthonimalai ,
× RELATED வாட்டி வதைக்கும்...