×

ஊட்டி ஆவினில் தீ விபத்து

ஊட்டி,அக்.20: நீலகிரி மாவட்டம் ஊட்டி - குன்னூர் சாலையில் ஆவின் வளாகம் அமைந்துள்ளது. மாவட்டம் முழுவதிலும் இருந்து பொதுமக்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பால், இங்கு கொண்டு வரப்பட்டு குளிரூட்டப்பட்டு பாக்கெட்களில் அமைக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. இதுதவிர ஐஸ்கீரிம், நெய், வெண்ணைய், பால்கோவா உள்ளிட்ட பல்வேறு பால் சார்ந்த பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணியளவில் ஆவின் வளாகத்தில் அட்ைட பெட்டிகள் மற்றும் ஐஸ்கீரிம்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக ஊட்டி தீயணைப்புத்துறைக்கு ஆவின் ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் அட்டை பெட்டிகள் எரிந்து நாசமாகின. தீயணைப்புத்துறையினர் விரைந்து செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

Tags : Fire accident ,Ooty ,
× RELATED தஞ்சை பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து