×

சத்துணவு மையங்களில் தீ தடுப்பு கருவிகள்

ஊட்டி, அக். 20: நீலகிரி மாவட்டத்தில் நஞ்சநாடு, தும்மனட்டி, தூனேரி, எடக்காடு, அதிகரட்டி, கோத்தகிரி, கீழ்கோத்தகிரி, ெகாளப்பள்ளி, ஸ்ரீமதுரை ஆகிய அரசு பள்ளிகள் மற்றும் சுள்ளிகூடு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, பாடந்தொரை அரசு உயர்நிலை பள்ளிகளில் எம்ஜிஆர்., சத்துணவு திட்டத்தி–்ன் கீழ் செயல்பட்டு வரும் 12 சத்துணவு மையங்களுக்கு தீயை அணைக்கும் உலர் ரசாயனத் தூள் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஊட்டியில் நடந்தது.
இதில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பங்கேற்று கருவிகளை வழங்கினார். இக்கருவிகள் சத்துணவு மையங்களில் மாணவர்கள் மற்றும் பள்ளியின் பாதுகாப்பு கருதி வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

Tags : nutrition centers ,
× RELATED 509 அமைப்பாளர், சமையலர்கள் நேரடி நியமனம்...