×

மாணவர்களை வீட்டில் சந்திக்க ஆசிரியர்களுக்கு உத்தரவு எஸ்டேட் பகுதிகளில் கொரோனா பரவும் அபாயம்

வால்பாறை, அக். 20:  வால்பாறை பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களை வீடுகளில் சந்திக்க வால்பாறை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்திரவிட்டுள்ளது. வால்பாறை டவுன் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் கொரோனா பரவி வரும் நிலையில், வால்பாறையில் இருந்து எஸ்டேட்களுக்குள் ஆசிரியர்கள் செல்வதால், பெற்றோர்கள் மற்றும் தோட்ட நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்து உள்ளனர். வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து எஸ்டேட்களிலும் கொரேனா சிறப்பு முகாம் அமைத்து பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் வெளியூர் நபர்கள் எஸ்டேட்டிற்குள் செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை.

  இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: ‘வால்பாறை பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. வால்பாறை டவுனில் இருந்து தோனிமுடி எஸ்டேட்டில் உள்ள ஒரு மாணவிக்கு பாடம் சொல்லிக்கொடுக்க ஆசிரியர் செல்வதை விட, அந்த எஸ்டேட்டில் உள்ள பள்ளியை திறந்து, பாடம் நடத்துவது பாதுகாப்பானது மற்றும் சுலபமாக இருக்கும். எனவே பல்வேறு ஊர்களில் இருந்து வரும் ஆசிரியர்களை, தற்போது பாதுகாப்பாக உள்ள எஸ்டேட் பகுதிக்குள் செல்ல கல்வித்துறை உத்தரவிட்டு இருப்பது மாணவர்களுக்கு கொரோனா பரவும் அபாயத்தை ஏற்பத்தி உள்ளது என்றனர்.

இது பற்றி தலைமையாசிரியர் ஒருவர் கூறியதாவது: அரசு சார்பில் கல்வித்துறைக்கு ஆசிரியர்களை எஸ்டேட் பகுதியில் சென்று கல்வி கற்பிக்க உரிய உத்தரவு பிறப்பிக்கவில்லை. ஆனால் வால்பாறை பகுதியில் உள்ள சில பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களும் ஒரே நேரத்தில் பணியில் உள்ளனர். சில பள்ளிகளில் சுழற்சி முறையில் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், வால்பாறையில் 99 சதவீத இடங்களில் கல்வி தொலைக்காட்சி தெரிவதில்லை. ஆன்லைன் வகுப்புக்கு செல்போனில் சரியாக டவர் கிடைப்பதில்லை. மாணவர்களை தொடர்பு கொள்ளவும் முடிவதில்லை. ஆனால் டவர் பிரச்னை இல்ல பகுதிகளில் ஆன்லைன் வகுப்புகளில் 4-6 மாணவர்கள் மட்டுமே பங்ககேற்கின்றனர். பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் குளறுபடியான உத்தரவை பிறப்பிப்பதால், பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் நீடிக்கிறது என்றார்.

Tags : Teachers ,home ,estate areas ,
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்