×

மாத தவணை, கடன் வசதியுடன் வீட்டு மனைகள் விற்பனை

கோவை, அக். 20: கோவை நியூ சித்தாபுதூரில் செயல்படும் இந்துஸ்தான் பல மாநில கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் சார்பில் கோவை-சத்தி ரோடு, 800மீ அருகில் எவரெஸ்ட் அரசு, எம்ளாயிஸ் என்கிளேவ் என்ற பெயரில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் டி.டி.சி.பி. அப்ரூவல் பெற்ற வீட்டுமனைகள், வீடுகள் விற்பனை செய்து வருகிறார்கள். இங்கு மாத தவணையாக ரூ.4,500ம், வீடுகள் வாங்க மாத தவணையாக ரூ.11,500 செலுத்தி மனைகளை வாங்கி கொள்ளலாம். வீட்டுமனை வாங்க 70 சதவீதம் கடன் வசதி, வீடு வாங்க 80 சதவீத கடன் வசதி செய்து தரப்படும். சலுகைகளாக மத்திய, மாநில அரசு பணியாளர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு 50 சதவீதம் சலுகை விலைகள் அறிவித்துள்ளது. அழகிய தனி வீடுகள் சுமார் ரூ.14 லட்சம் முதல் விற்பனைக்கு உள்ளது. பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் தகுதியுள்ள நபர்களுக்கு ரூ.2.67 லட்சம் வரை வட்டி மானியம் பெற்றுத்தரப்படும். இந்துஸ்தான் பல மாநில கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் வீட்டுமனைகள், வீடுகள் வாங்கி பயன்பெறும்படி சேர்மன் ஆதவன், நிர்வாக இயக்குனர் கருப்புசாமி மற்றும் எவரெஸ்ட் பில்டர்ஸ் அண்டு புரமோட்டர்ஸ் நிர்வாக இயக்குனர் சிவக்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.

Tags : houses ,
× RELATED வட்டியில்லா சுலப தவணை திட்டம் உட்பட...