×

வேளாண் சட்டத்தை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்

ஈரோடு, அக். 20:  வேளாண் சட்டத்தை திரும்ப பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் ஸ்டாப் அருகே நேற்று புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரகாசம் தலைமை தாங்கினார். இதில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். ரயில்வே, விமான போக்குவரத்து மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், மக்கள் சிவில் உரிமைக்கழக மாநில தலைவர் கண குறிஞ்சி, திராவிட கழக மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் பொன்னையன், ம.தி.மு.க. கந்தசாமி, திராவிட விடுதலை கழக அமைப்பு செயலாளர் ரத்தினசாமி, த.ம.மு.க. சித்திக், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் முகமது லுக்மானுல் அக்கீம் உள்ளிட்ட பவ்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்