×

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அதிமுக 49ம் ஆண்டு துவக்க விழா

தென்காசி, அக்.18:  தென்காசியை அடுத்த மேலகரத்தில் பேரூர் அதிமுக சார்பில் கட்சியின் 49ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும், கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.  நிகழ்ச்சிக்கு மேலகரம் பேரூர் கழக செயலாளரும், அரசு வழக்கறிஞருமான வக்கீல் கார்த்திக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் நெல்லை முகிலன் முன்னிலை வகித்தார். தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், ஒன்றிய செயலாளர் சங்கரபாண்டியன், அரசு வழக்கறிஞர் சின்னத்துரை பாண்டியன், மேலமைப்பு பிரதிநிதி நாராயணன், வார்டு செயலாளர்கள் முருகசாமி, வெங்கடேஷ், பழனி, சுப்பிரமணியன், முருகையா, முப்புடாதி, பாலகிருஷ்ணன், சேகர், மகேஷ், செல்வராஜ், ராஜா,அருணாசலம், கொத்தாளி, முப்புடாதி,பழனியாபிள்ளை.

தில்லை நடராஜன், அய்யம்பெருமாள், ஆட்டோ தொழிற்சங்கம் செந்தில்வேல், பழனி, ராமகிருஷ்ணன், ரவி, பரமசிவன், சுப்ரமணியன், இளைஞர் பாசறை நிர்வாகிகள் கோமதிஈஸ்வரன், பரமேஸ்வரி, உச்சிமாகாளி, ஆனந்தி, பிரமுஅம்மாள், சீனிவாசன், கைலாசம், மந்திரம், சுடலை, வெங்கடேஷ், ராசு, அசோக், ரவி, பெரியபிள்ளை வலசை வேம்பு என்ற ரவி, லாடசன்னியாசி என்ற சாமிநாதன்  உட்பட பலர் கலந்து கொண்டனர். தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முருகன் நன்றி கூறினார். செங்கோட்டை:  தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நடந்த ஆண்டு விழா நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தலைமை வகித்து கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். பொதுமக்களுக்கு மூலிகை மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிகளில் கடையநல்லூர் நகர செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் வசந்தம் முத்துபாண்டியன், செல்லப்பன், சங்கரபாண்டியன், பேரூர் செயலாளர்கள் டாக்டர் சுசீகரன், முத்துக்குட்டி, முத்தழகு, பாலசுப்பிரமணியன், அலியார், நல்லமுத்து, முன்னாள் மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி, கடையநல்லூர் முன்னாள் நகர செயலாளர் கிட்டுராஜா, வடகரை ராமர் மற்றும் நிர்வாகிகள் வார்டு செயலாளர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்
வி.கே.புரம் :  அம்பையில்  அதிமுக 49ம் ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது. இதில் முருகையாபாண்டியன் எம்எல்ஏ கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து        எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.  இதேபோல் வி.கே.புரம் அதிமுக அலுவலகத்திலும் நகர செயலாளர் கண்ணன் தலைமையிலும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படத்திற்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட  இளைஞர் பாசறை இணைச்செயலாளர் வெங்கட்ராமன், அம்பை     அதிமுக ஒன்றிய செயலாளர் விஜயபாலாஜி, துணை செயலாளர் பிராங்கிளின், நகர செயலாளர்கள் அறிவழகன் (அம்பை) ராமையா(மணிமுத்தாறு), பழனிக்குமார்(சேரன்மகாதேவி), கண்ணன்(வி.கே.புரம்), சங்கரநாராயணன்(கல்லிடைக்குறிச்சி), முன்னாள் நகராட்சி துணை தலைவர் மாரிமுத்து, மினி சூப்பர் மார்க்கெட் கூட்டுறவு தலைவர் சங்கரலிங்கம், பேச்சாளர் மீனாட்சிசுந்தரம், அம்பை ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் வடிவேலன், முன்னாள் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், அரசு வக்கீல் கோமதி சங்கர், அம்பை நகர இளைஞர் அணி செயலாளர் சண்மு, வி.கே.புரம் நகர எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் அருண், மதுரா கோட்ஸ் அதிமுக தொழிற்சங்க செயலாளர் கைகண்டார், குஞ்சுபாலு, பால்ராஜ், ஆபிரகாம் உட்பட பலர் கலந்து கொண்டனர். சங்கரன்கோவில்:  சங்கரன்கோவிலில் நடந்த அதிமுக 49ம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். பொருளாளர் வேல்சாமி, ஒன்றிய செயலாளர் ரமேஷ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பரமகுருநாதன் முன்னிலை வகித்தனர். பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதில் குருவிகுளம் ஒன்றிய பேரவை செயலாளர் ஜெகதீசன், மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் ஜோதிராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் முருகையா, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் ரவிச்சந்திரன், நகர ஜெ. பேரவை செயலாளர் சவுந்தர் என்ற சாகுல்ஹமீது, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் சங்கரசுப்பிரமணியன், அரசு ஒப்பந்ததாரர்கள் மாரியப்பன், சங்கர், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயலட்சுமி, ஆனந்த், சின்ராஜ், சரவணன், நாகரத்தினம், நிர்வாகிகள் கணேசன், நிவாஸ், கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புளியங்குடி:  புளியங்குடியில் நடந்த அதிமுக 49வது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் பரமேஸ்வர பாண்டியன் தலைமை வகித்தார். அவைத்தலைவர் கடுவா முகம்மது உசேன் வரவேற்றார். மனோகரன் எம்எல்ஏ கலந்து கொண்டு எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து பட்டாசு வெடித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

விழாவில் ஒன்றிய செயலாளர் மூர்த்திபாண்டியன், மாவட்ட பொருளாளர் சண்முகையா, மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் வெங்கடேஷ், தொகுதி செயலாளர் துரைப்பாண்டியன், ராயகிரி செயலாளர் சேவுகப்பாண்டி, பேச்சாளர் புகாரி, நகர பொருளாளர் முருகன், மாவட்ட பிரதிநிதி சங்கர், துணை செயலாளர்கள் சேட் முருகேசன், ஜோதிகங்கையா, மகளிரணி செயலாளர் ராமலட்சுமி, இளைஞரணி செயலாளர் கோபி என்ற கிருஷ்ணசாமி, சிறுபான்மை அணி செயலாளர் லியாகத் அலி, வர்த்தக செயலாளர் கணபதி, விவசாய பிரிவு செயலாளர் கோட்டூர் சாமி, முன்னாள் கவுன்சிலர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் துரைப்பாண்டி நன்றி கூறினார்.

Tags : AIADMK ,inauguration ceremony ,districts ,Nellai ,Tenkasi ,
× RELATED தமிழ் மாநில காங்கிரஸ் 7-ம் ஆண்டு துவக்க விழா