×

ராதாபுரம் ஒன்றியத்தில் 10 பஞ்சாயத்துகளில் திமுக இணையவழி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திசையன்விளை, அக்.18:  ராதாபுரம் ஒன்றியத்தில் 10 பஞ்சாயத்துகளில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த எல்லோரும் நம்முடன் இணையவழி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் பங்கேற்று 10 பஞ்சாயத்துகளில் உறுப்பினர் சேர்க்கையை நேரடியாக மேற்கொண்டார். க.உவரியில் நடந்த நிகழ்ச்சியில் சுமார் 2 ஆயிரத்து 500 உறுப்பினர்களை சேர்க்கும் பணியை துவக்கி வைத்தார். தொடர்ந்து முதுமொத்தன்மொழி ஊராட்சிக்கு உட்பட்ட தலைவன்விளை, குட்டம், இடையன்குடி உட்பட பல்வேறு ஊராட்சிகளில் உறுப்பினர் சேர்க்கை நடந்தது. உறுப்பினர் சேர்க்கையை துரிதப்படுத்த தலைவன்விளை பகுதியில் இளையபெருமாளுக்கும், இடையன்குடியில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜேகருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட பிரதிநிதி ரமேஷ், உறுமன்குளம் ஊராட்சி செயலாளர் அமெச்சியார், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் தனபால், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் ஜான்சன், கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,e-membership camp ,panchayats ,Radhapuram ,
× RELATED திமுகவினர் ஆர்ப்பாட்டம்