×

களக்காடு அருகே இளம்பெண் மாயம்

களக்காடு, அக். 18: களக்காடு அருகே உள்ள கீழ உப்பூரணி கீழத்தெருவை சேர்ந்தவர் முத்துக்குட்டி (30). சமையல் மாஸ்டராக உள்ளார். இவரது மனைவி தேவகிருபா (27). இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதியினருக்கு 6 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் தேவகிருபா. கடந்த 10ம் தேதி காலை 11 மணிக்கு வருமான சான்றிதழ் வாங்குவதற்காக நாங்குநேரிக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துக்குட்டி பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்  களக்காடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் காளியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான தேவகிருபாவை தேடி வருகின்றனர்.

Tags : jungle ,
× RELATED 4 நக்சல்கள் பலி