×

மேலகூட்டுடன்காட்டில் திமுக உறுப்பினர் சேர்க்கை

தூத்துக்குடி, அக்.18: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி இணையவழி திமுக உறுப்பினர் சேர்ப்பு முகாம் தூத்துக்குடி மத்திய ஒன்றியம் கூட்டுடன்காடு ஊராட்சியில் மேலகூட்டுடன்காட்டில் நடந்தது. தூத்துக்குடி எம்பி கனிமொழி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா ஆகியோர் ஆலோசனையின் பேரில் இந்நிகழ்ச்சி நடந்தது. இணையவழி திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமை தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஜெயக்கொடி துவக்கி வைத்தார். முகாமிற்கு தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய 9வது வார்டு கவுன்சிலர் முத்துக்குமார் தலைமை வகித்தார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, மாவட்ட நெசவாளரணி துணை அமைப்பாளர் வெயில்ராஜ், தூத்துக்குடி ஒன்றிய கவுன்சிலர்கள் நர்மதா ரூபன், மரிய செல்வி தாசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நாகராஜன், கூட்டுடன்காடு ஊராட்சி கிளைச் செயலாளர்கள் கல்லாதான், சீனிவாசகம் மகாராஜன், சேரந்தயன், குமாரகிரி கிளைச் செயலாளர் செல்வின் சைமன், ராஜா ஸ்டாலின்,  இளைஞரணி பாலமுருகன், மகளிரணி பேச்சியம்மாள், ஆவுடையாச்சி உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : DMK ,
× RELATED சிவகிரியில் திமுக உறுப்பினர் சேர்க்கை