×

பைக் மோதி முதியவர் காயம்

திருச்செந்தூர், அக். 18: திருச்செந்தூரில் சைக்கிள் மீது பைக் மோதியதில் காவலாளி காயமடைந்தார். திருச்செந்தூர் காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்(58). இவர் குலசேகரன்பட்டினம் அறம்வளர்த்த நாயகி அம்மன் கோயிலில் காவலாளியாக உள்ளார். இவர், வேலை முடிந்து சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். திருச்செந்தூர்-வீரபாண்டியன்பட்டனம் சாலையில் லாட்ஜ் அருகே வரும் போது எதிரே பைக்கில் வந்தவர் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டார். இதில் படுகாயமடைந்த மாரியப்பன், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தாலுகா சப்இன்ஸ்பெக்டர் அந்தோணி துரைசிங்கம் விசாரித்து வருகிறார்.

Tags :
× RELATED மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது