×

அயோத்தியாப்பட்டணம் அருகே மயான நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மறியல்

அயோத்தியாப்பட்டணம், அக்.18 அயோத்தியாப்பட்டணம் அருகே, மயான நில ஆக்கிரமிப்பை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அயோத்தியாப்பட்டணம் அடுத்த உடையாப்பட்டி அருகே, தாதம்பட்டி காந்தி நகர் பகுதியில் மயானத்திற்கு சொந்தமான இடத்தை அருகில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் நிறுவனத்தினர் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறிஇ கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை சமாதனப்படுத்தி அனுப்பி வைத்தனர். ஆனால், ஒரு மாதமாகியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனை கண்டித்து, நேற்று அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு, சேலம்-சென்னை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த அம்மாபேட்டை போலீசார் மற்றும் சேலம் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டவில்லை. தொடர்ந்து, சேலம் மாநகர உதவி கமிஷனர் ஆனந்த்குமார், சம்பவ இடத்திற்கு வந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர், அவர்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : removal ,burial ground ,Ayodhya ,
× RELATED பேரையூரில் பாதாள சாக்கடை அடைப்புகள் அகற்றம்