×

மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

தேன்கனிக்கோட்டை, அக்.18:  கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், வரும் 20ம் தேதி(செவ்வாய்கிழமை) காலை 10மணியளவில் ஓசூர் அப்பாவு நகரில், மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமையில் நடக்கிறது. மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர். கூட்டத்தில் முப்பெரும் விழா கொண்டாட்டம் மற்றும் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் தொடர்பாகவும் விவாதிக்கப்படுகிறது. எனவே, இன்னாள், முன்னாள் எம்எல்ஏக்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாநில மாவட்ட, ஒன்றிய, பேரூர் அணிகளின் அமைப்பாளர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Tags : West District DMK Executive Committee Meeting ,
× RELATED நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்