×

பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

தர்மபுரி, அக்.18: ஐப்பசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, தர்மபுரி பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ஐப்பசி மாத முதல் நாளான நேற்று, மூக்கனூர் பெருமாள் கோயிலில், சுவாமி தங்க கவசத்தில் அருள்பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் பிரகாஷ் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். அதேபோல், மணியம்பாடி வெங்கட்ரமண பெருமாள் கோயிலில், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பாப்பிரெட்டிபட்டியில் உள்ள பெருமாள் கோயில் உள்பட  மாவட்டத்தின் பல்வேறு கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், திரளான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்தனர்.

Tags : Perumal ,temples ,
× RELATED சிவாலயங்களில் சங்கு பூஜை