ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்த முடியாததால் கல்லூரி மாணவர் தற்கொலை

தர்மபுரி, அக்.18: ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்த முடியாமல், சேலம் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி கோழிமேக்கனூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் அழகரசன். இவரது மகன் கார்த்திகேயன்(20), சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால், கார்த்திக்கால் ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. இதுகுறித்து, தனது பெற்றோரிடம் அடிக்கடி கூறி வந்தார். இந்நிலையில், மனமுடைந்த நிலையில் இருந்த கார்த்திகேயன், நேற்று முன்தினம் வீட்டில் விஷத்தை குடித்து விட்டு மயங்கினார். அவரை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>