×

பருவமழை பாதுகாப்பு நடவடிக்கை கடலூர் மாவட்டத்தில் தயார் நிலையில் 233 பேரிடர் பாதுகாப்பு மையங்கள் கூடுதல் தலைமை செயலர் தகவல்

கடலூர் , அக். 18: .கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  தமிழக கூடுதல் தலைமை செயலரும் வருவாய் நிர்வாக ஆணையருமான பணீந்திரரெட்டி  நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிப்படைய வாய்ப்புள்ளதாக 278 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் 28 புயல் பாதுகாப்பு மையங்களும், 14 பல்நோக்கு மீட்பு மையங்களும், 191 தற்காலிக தங்கும் மையங்களும் தயார் நிலையில் உள்ளன. மாவட்டத்தில் 1,666 ஆண்கள், 1574 பெண்கள் என 3,240 முதல்நிலை பொறுப்பாளர்கள் கண்டறிப்பட்டு அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மழைக்காலங்களில் விழும் மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதற்கும், கால்நடைகளை பாதுகாக்கவும் தலா 1,390 நபர்கள் கண்டறிப்பட்டுள்ளனர்.356 நீச்சல் தெரிந்த நபர்களும், 26 பாம்புபிடி வீரர்களும், பொதுமக்களுக்கு உதவுவதற்கு தயார் நிலையில்  உள்ளனர்.  86,980 மணல் மூட்டைகள், 178 பொக்லைன் இயந்திரங்கள், 332 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 17 நீர் உறிஞ்சும் பம்புகள், மீட்பு பணிக்கு தேவையான 14 ரப்பர் படகுகள், 11 பைபர் படகுகள், 8000 மின்சாரக்கம்பங்கள், 100 மின்மாற்றிகள், 2000 மின்கடத்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.  மாவட்டத்தில் உள்ள 423 பாலங்கள் மற்றும் 6,224 சிறு பாலங்களிலுள்ள அடைப்புகள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளன. அவசரகால கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

Tags : Chief Secretary ,233 Disaster Protection Centers ,Cuddalore district ,
× RELATED தடையின்றி குடிநீர் விநியோகம், கோடைகால...