×

இன்ஸ்பெக்டர் பெயரில் போலி முகநூல் கணக்கு துவங்கி நண்பர்களிடம் பணம் பறிக்க முயற்சி மர்ம நபருக்கு வலை

புதுச்சேரி, அக். 18: புதுவை கோரிமேடு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் இனியன். சப்-இன்ஸ்பெக்டராக இருந்த, இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் இன்ஸ்ெபக்டராக பதவி உயர்வு பெற்றார். இந்நிலையில் இவரது பெயரில் மர்ம நபர் ஒருவர் போலியாக முகநூல் கணக்கு தொடங்கியுள்ளார். இதில் இன்ஸ்பெக்டரின் நண்பர்களையும் இணைத்துள்ளார். தொடர்ந்து அவர்களுக்கு ஹாய், ஹலோ, எப்படி இருக்கீங்க? நலமா? என மெசஞ்சர் மூலம் நலம் விசாரித்துள்ளார். அவர்களும் இன்ஸ்பெக்டர்தானே கேட்கிறார் என பதில் அளித்து வந்துள்ளனர்.இதையடுத்து அந்த நபர், இன்ஸ்பெக்டரின் நண்பர்களிடம் போன் நம்பரை பெற்று, தனது போன் நம்பரை மாற்றிவிட்டதாக கூறியுள்ளார். இப்படியே மெல்ல மெல்ல அவர்களிடம், தனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. உடனடியாக ரூ.25 ஆயிரம் பணம் வேண்டும், ரூ.30 ஆயிரம் பணம் வேண்டும் என மெசஞ்சர் மூலம் கேட்டுள்ளார்.

இதேபோல தமிழகத்தை சேர்ந்த 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், புதுச்சேரியில் உள்ள சில போலீசார், இனியனின் நண்பர்கள் உள்ளிட்டோரிடம் பணம் கேட்டுள்ளார். இதில் சிலர் இனியனின் செல் நம்பருக்கு பேசி, உங்களுக்கு ஏதும் பிரச்னையா? திடீரென பணம் கேட்கிறீர்களே? என விசாரித்துள்ளனர். இதை கேட்டு, அதிர்ச்சி அடைந்த இனியனுக்கு தனது பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கப்பட்டு, மேற்கண்ட பிரச்னைகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் புதுச்சேரி சைபர் கிரைமில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இனியனை போலவே புதுச்சேரி போக்குவரத்து காவல்துறையில் பணியாற்றி வரும் உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு போலீஸ்காரர் பெயரிலும் போலி கணக்கு துவங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது.புதுச்சேரியில் இன்ஸ்பெக்டர் பெயரில் போலியாக முகநூல் துவங்கி, நண்பர்களிடம் பணம் கேட்டு மர்ம நபர் மோசடி செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : mystery person ,friends ,inspector ,
× RELATED கன்னியாகுமரி அருகே ஆபாசமாக திட்டியதால் கீழே தள்ளி கொன்றோம்