×

49ம் ஆண்டு துவக்க விழா அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

திருவில்லிபுத்தூர், அக்.18:  திருவில்லிபுத்தூரில் அதிமுகவின் 49ம் ஆண்டு துவக்க விழா எம்எல்ஏ சந்திரபிரபா தலைமையில், பேருந்து நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர்கள் முத்தையா, மயில்சாமி,மாவட்ட கவுன்சிலர் கணேசன்,மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் மீரா தனலட்சுமி முருகன், நகரப் பொருளாளர் கருமாரி முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றிய அதிமுக சார்பாக பந்தல்குடியில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் ஒன்றிய அதிமுக செயலாளர்கள் போடம்பட்டி சங்கரலிங்கம், தாமோ.வெங்கடேஷ், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ராஜபாளையத்தில் சத்திரபட்டி சாலையிலுள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு அம்மா பேரவை நகர செயலாளர் துரைமுருகேசன், நகர செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து அதிமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் நகர அவைத்தலைவர் பரமசிவம், பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் வனராஜ் சொக்கநாதன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். காரியாபட்டி பஸ் நிலையம் முன்பு ஒன்றியச் செயலாளர்கள் ராமமூர்த்தி ராஜ், தோப்பூர் முருகன் ஆகியோர் எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் திருச்செல்வம், நாகர் பாண்டீஸ்வரி, ஊராட்சி தலைவர்கள் முத்துப்பாண்டி, சரவணன், தர்மர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

திருச்சுழி: நரிக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளரும், நரிக்குடி ஒன்றிய துணை தலைவரான அம்மன்பட்டி ரவிச்சந்திரன்,மேற்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன் தலைமையிலும், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர்கள் தியாகராஜன், வீரபாண்டி,கலாநிதிசந்திரன், விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை தலைவர் அம்மா சரவணன் உட்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். நரிக்குடியில் உள்ள அழகியமீனாள்  கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினர். திருச்சுழி தெற்கு,வடக்கு ஒன்றிய சார்பில் ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம் , முனியாண்டி ஆகியோர் தலைமையில் விழா நடந்தது. சாத்தூரில் முக்குராந்தல் பகுதியில் நகர செயலாளர் வாசன் தலைமையில் கட்சிக் கொடியை ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

Tags : Inauguration Ceremony ,
× RELATED 49 சிறப்பு முகாம்களில் தங்கியிருந்த 1,831 பேருக்கு நிவாரண பொருட்கள்