×

பெரியகுளம் ஒன்றிய திமுக ஊழியர் கூட்டம்

பெரியகுளம், அக். 18:பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் பெரியகுளம் ஒன்றிய திமுக ஊழியர் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய அவைத்தலைவர் ரபீக்ராஜா தலைமை, மாநில விவசாய தொழிலாளர் பிரிவு தலைவர் முக்கையா முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொறுப்பாளர் பாண்டியன் வரவேற்றார். கூட்டத்தில், பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்கமார், தேனி மாவட்ட திமுக பொருளாளர் அருணா சேகர், மற்றும் நிர்வாகிகள் அன்பழகன், கன்னையன், முருகாயி காமராஜ், காஞ்சனா முருகவேல் உட்பட பேருர், கிளைச்செயலாளர்கள் மாவட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன், வரும் 20ம் தேதி தேனி மாவட்டத்தில் 130 இடங்களில் காணொலி காட்சி மூலம் கட்சியினரையும், பொதுமக்களிடமும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் எப்படி செய்ய வேண்டும், வரும் தேர்தலில் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது தொடர்பாகவும் விளக்கி பேசினார். பின்னர் தங்கதமிழ்செல்வன் கூறியதாவது : தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சிமன்ற தேர்தலில் அதிக இடங்களில் திமுகவினர் வெற்றி பெற்று ஊராட்சி தலைவர், மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளை வகித்து வருவதால். அதை பொறுத்துக் கொள்ளாத இபிஎஸ் அரசு ஊராட்சி மன்றங்களுக்கு வழங்க வேண்டிய நிதிகளை முறையாக வழங்காமல் உள்ளது. அரசு அதிகாரிகளுக்கு இதுபோன்ற அவமதிப்பு ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினராலும், அதிமுக நிர்வாகிகளாலும் நடைபெறுகிறது. வரும் தேர்தலில் திமுக ஆட்சியை பிடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Periyakulam Union DMK Employees Meeting ,
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...