×

இளைஞர்கள் கையில் நாட்டின் எதிர்காலம் துணைவேந்தர் பேச்சு

காரைக்குடி, அக். 18: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர் எழுச்சி தினம் இணையவழியில் கொண்டாப்பட்டது. கலைப்புல முதன்மையர் முருகன் வரவேற்றார். துணைவேந்தர் ராஜேந்திரன் தலைமை வகித்து பேசுகையில், ‘நாட்டின் வளமும், எதிர்காலமும் இளைஞர்களின் கையில் உள்ளது. இதனை உணர்ந்த அப்துல்கலாம் இளைஞர்களை வழிநடத்துவது குறித்து வாழ்நாள் முழுவதும் பேசியும், எழுதியும் வந்தார். அவரை பின்பற்றி முன்னேற்றம் அடைவதை இளைஞர்கள் குறிக்கோளாக கொள்ள வேண்டும். கலாமின் அறிவியல் அலோசகராக இருந்த பொன்ராஜ் பேசுகையில், ‘இந்தியாவில் விண்வெளித்துறை, ஏவுகணைத்துறை, பாதுகாப்புத்துறை, அணுஆற்றல் துறையில் ஏற்பட்ட அபரிவிதமான வளர்ச்சிக்கு கலாமின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. ஒரு கிருமி சிந்தித்தால் அழிவு, ஒரு மனிதன் சிந்தித்தால் வாழ்வு என்பதை இக்கொரோனா காலம் உணர்த்தியுள்ளது. செல்போன், சினிமா, சமூக ஊடகங்களின் மேல் கொண்டுள்ள மோகம், அடிமைத்தனத்தை விட்டுவிட்டு லட்சியத்தை நோக்கி பயணிக்க வேண்டும். அதுவே வெற்றியை தேடித்தரும். அனைத்து வாய்ப்புகளையும் இளைஞர்கள் அறுவடை செய்தால் தான் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்’ என்றார். தொடர்ந்து இணையவழியில் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்று வழங்கப்பட்டது.

Tags : Vice-Chancellor ,country ,
× RELATED புதிய கால்பந்து அணி வேல் எப்சி அறிமுகம்