×

காளையார்கோவிலில் மயானம் செல்லும் வழியில் குழி ெபாதுமக்கள் அவதி

காளையார்கோவில், அக். 18: காளையார்கோவில் ஊராட்சிக்குட்பட்டது செந்தமிழ் நகர். இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இறந்தவர்களை புதைப்பதற்காக ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கிய இட்தில் அரசு சார்பில் மயானம் கட்டப்பட்டுள்ளது. தற்போது இம்மாயனத்திற்கு செல்வதற்காக அரசு சார்பி–்ல் மெட்டல் ரோடு அமைக்கப்பட்டு வருகிறது. மயானத்திற்கு செல்லும் ரோடு தனது பட்டா நிலத்தில் உள்ளதாக கூறி அதே பகுதியை சேர்ந்த ஒருவர் ஜேசிபி இயந்திரம் மூலம் யாரும் நடக்க முடியாதவாறு குழி தோண்டி போட்டுள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் மயானம் செல்ல முடியாமல் அவதியடைந்தனர். மேலும் அவர்கள் அளித்த தகவலின்பேரில் போலீசார், அதிகாரிள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலர் கூறியதாவது, ‘இம்மயானம் ஆதிதிராவிடர்களுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளது. அதற்கான பதிவு பதிவேட்டில் உள்ளது . இதுகுறித்து நாளை சர்வேயர் மூலம் அளந்து நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் கூறியுள்ளார்’ என்றார்.

Tags : Pit people ,Kaliningrad ,cemetery ,
× RELATED வேஷ்டியை கழற்றி ரகளை அமமுக ஒன்றிய செயலர் கைது