49வது ஆண்டு விழா அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

பேரையூர், அக்.18:  சேடபட்டி பகுதியில் அதிமுகவின் 49வது ஆண்டுவிழா உசிலம்பட்டி எம்.எல்.ஏ. நீதிபதி தலைமையில் சேடபட்டி, சின்னக்கட்டளை, பெருமாள்கோவில்பட்டி, கணவாய்ப்பட்டி, உள்ளிட்ட பகுதியில் கொடியேற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. சேடபட்டியில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜேந்திரன் தலைமையில், எம்.எல்.ஏ, நீதிபதி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் உசிலம்பட்டி நகர செயலாளர் பூமாராஜா, மாவட்டக வுன்சிலர் சுதாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அலங்காநல்லூர் அருகே கோவிலூர் கிராமத்தில் எம்.ஜி.ஆர் சிலைக்கு அதிமுக ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் மாலை அணிவித்தார். நகரச் செயலாளர் அழகுராஜா, ஒன்றிய கவுன்சிலர் ஆர்.சி.பிரபு, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சோழவந்தான் அருகே கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரத்தில் பேரூர் செயலாளர் கொரியர் கணேசன் தலைமையிலும், மன்னாடிமங்கலம் கிராமத்தில் அம்மா பேரவை கிளைச் செயலாளர் ராஜபாண்டி தலைமையில் கொடியேற்றப்பட்டது.

திருமங்கலம் கண்டுகுளம் கிராமத்தில் எம்ஜிஆர் சிலைக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையில் அவைத்தலைவர் அய்யப்பன், சிறுபான்மை அணி செயலாளர் ஜகாங்கீர், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சிங்கராஜ்பாண்டியன் பலர் மாலை அணிவித்தனர்.

Related Stories:

>