×

இஎம்ஐ கட்ட வணிகர்களுக்கு 6 மாதம் அவகாசம் வேண்டும் சங்க மாநில தலைவர் பேட்டி

மதுரை, அக்.18:  ‘வணிகர் பிரச்னைகளை எடுத்துச் சொல்ல இடம் வேண்டும்’ என்று தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை மாநிலத்தலைவர் முத்துக்குமார் தெரிவித்தார். மதுரையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘கொரோனா காலத்தில் வாங்கிய கடனுக்கு இஎம்ஐ கட்ட வணிகர்களுக்கு 6 மாத கால அவகாசம் கொடுத்தனர். ஆனால், அதற்கு கூட்டு வட்டி கேட்கப்பட்டது. அதனை தள்ளுபடி செய்ய கோரி, ‘வரிகொடா போராட்டம்’ அறிவித்தோம். ஆனால் இதன்பேரில் வரும் 2ம் தேதி தீர்ப்பு வரலாம் என்பதால், தற்காலிகமாக இப்போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.  

வணிகர் நல வாரியம் அமைக்கப்பட்டும், செயல்படாமல் உள்ளது. இவ்வாரியம் செயல்படுவது சிறு வியாபாரிகளுக்கு உறுதுணையாக இருக்கும். இந்த வாரியத்தை புதுமைப் படுத்தவேண்டும். கடந்த காலத்தில் வணிகர் பிரச்னைகளை எடுத்துச் சொல்ல மேல் சபை இருந்தது. ஆனால் தற்போது மேல்சபை கிடையாது. ஆகவே வணிகர்கள் பிரச்னைகளை எடுத்துக்கூற  சட்டமன்றத்தில் எங்களுக்கு இடம் வேண்டும்’’ என்றார்.  மதுரை விளக்குத்தூணில் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பாண்டியராஜன் உள்பட ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர். 

Tags : state president ,association ,traders ,EMI ,
× RELATED தமிழ்நாடு பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மாநில தலைவர் அண்ணாமலை!