×

திண்டுக்கல்லில் ஆளுங்கட்சியினரால் போக்குவரத்து பாதிப்பு

திண்டுக்கல், அக். 18: திண்டுக்கல்லில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த அதிமுகவினரால் சாலைகள் முடங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். அதிமுக தொடங்கி 49வது ஆண்டை முன்னிட்டு நேற்று திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க அமைச்சர் சீனிவாசனின் ஆதரவாளர்கள் காரை நிறுத்தினர். இதே போல், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் மற்றும் அவருடன் வந்த முன்னாள் மேயர் மருதராஜ் உள்ளிட்டோர் 10க்கும் மேற்பட்ட கார்களில் வந்து பஸ்நிலையம் நுழைவு வாயிலில் நிறுத்தினர். இதனால் பஸ்கள் உள்ளே வரமுடியாமல் சுற்றி வந்தன. இதனால் பயணிகள், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

மேலும் சமூக இடைவெளி இல்லாமலும், முகக்கவசம் அணியாமலும் பெரும்பாலான அதிமுகவினர் வந்திருந்தனர். இதையடுத்து எம்ஜிஆர் சிலைக்கு விசுவநாதன்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கட்சிக்கொடியை ஏற்றினார்.
நத்தம் சாலையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க விசுவநாதன் வந்த போது அமைச்சர் சீனிவாசன் ஆதரவினருக்கு இடம் கொடுக்காததால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பானது.

Tags : party ,Dindigul ,
× RELATED கொடைக்கானல் அருகே பாறை உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு