×

மாவட்டம் முழுவதும் அதிமுக ஆண்டு விழா

நத்தம், அக். 18: அதிமுகவின் 49வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு  நத்தம் பஸ்நிலையம் முன்பாக ஒன்றியக்குழு தலைவர் கண்ணன் தலைமையில் கொடி ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது. தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், நகர செயலாளர் சிவலிங்கம், மாவட்ட பேரவை இணைச்செயலாளர் ஜெயபாலன், நகர் பேரவை செயலாளர் ஷேக்தாவூது கலந்து கொண்டனர்.
வத்தலக்குண்டு
வத்தலக்குண்டுவில் நடந்த விழாவிற்கு ஒன்றிய செயலாளர் மோகன் தலைமை வகித்து கொடி ஏற்றினார். ஒன்றிய செயலாளர் பாண்டியன், நகர செயலாளர் பீர்முகமது முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் கனிபாய், துரைராஜ், ஜான், ரத்தினம் சுதாகர், ராமமூர்த்தி, ஜெபராஜ் ஜெயபிரகாஷ்,  பிச்சை, சுந்தர், சதீஷ் கலந்து கொண்டனர்.
பட்டிவீரன்பட்டி
 பட்டிவீரன்பட்டியில் வத்தலக்குண்டு மேற்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன் கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். பட்டிவீரன்பட்டி நகர செயலாளர் ராஜசேகரன், பேரவை நகர செயலாளர் விசு உட்பட பலர் கலந்து கொண்டனர். எம்.வாடிப்பட்டியில் நடைபெற்ற விழாவில் சேவுகம்பட்டி நகர செயலாளர் மாசானம்  கலந்து கொண்டனர். 

Tags : AIADMK ,festival ,district ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...