×

மாலையில் படியுங்கள் பொதுமாறுதல் கலந்தாய்வை உடனே நடத்த வேண்டும் பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்

திண்டுக்கல், அக்.18: தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனர் மாயவன், மாநிலத்தலைவர் பக்தவச்சலம், மாநில செய்தித் தொடர்பு செயலாளர் முருகேசன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை: நியாயமான உண்மையான காரணங்களுக்காக இடமாற்றம் கோரும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் ஏராளமாக இருக்கும்போது அவர்களை எல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு வேண்டுபவர்களுக்கு மட்டும் இடம் மாறுதல் வழங்குவது கல்வித்துறையில் ஊழலுக்கும், முறைகேட்டிற்கும் வழிவகுக்கும். எனவே, பொது இடமாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும்.

பட்டதாரி ஆசிரியருக்கு இவ்வாண்டு வழங்க வேண்டிய உயர்நிலைப் பள்ளி - தலைமையாசிரியர் பதவி உயர்வுகளையும், முதுநிலைபட்டதாரி ஆசிரியை பதவி உயர்வுகளையும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றிக் கொண்டிருப்பவர்களை மட்டுமே பதவி உயர்வின் மூலம் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக நியமிக்க வேண்டும். உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு என்பது பட்டதாரி ஆசிரியர்களின் முழு உரிமை என்பதால் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி- தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை யை வற்புறுத்துகிறோம் என்று கூறியிருந்தனர்.

Tags : consultation ,Graduate Teachers' Association ,
× RELATED வேதகிரீஸ்வரர் சித்திரை திருவிழா...