×

49ம் ஆண்டு துவக்க விழா திருச்சியில் அதிமுகவினர் கொடியேற்றி கொண்டாட்டம்

திருச்சி, அக். 18: அதிமுகவின் 49ம் ஆண்டு துவக்க விழா தமிழகம் முழுவதும் கட்சியினரால் கொண்டாடப்பட்டது. திருச்சி கோர்ட் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு சுற்றுலாத்துறை அமைச்சரும், மாநகர் மாவட்ட செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் சார்பில் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஆவின் சேர்மன் கார்த்திகேயன், வக்கீல் ராஜ்குமார், அய்யப்பன், ஜாக்குலின், தமிரழசி சுப்பையா, பத்மநாபன், பகுதி செயலாளர்கள் அன்பழகன், நாகநாதர் பாண்டி, ஏர்போர்ட் விஜி, சுரேஷ்குப்தா, முஸ்தபா, வெல்லமண்டி பெருமாள், ஜவஹர்லால் நேரு, முத்துகுமார், முன்னாள் கோட்ட தலைவர் மனோகர் உள்பட ஏராளமான கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags : Anniversary Launching Ceremony ,AIADMK ,Trichy ,
× RELATED பாஜகவிடம் அதிமுகவை பகிரங்கமாக அடகு வைத்துவிட்டதாக கோபண்ணா விமர்சனம்