×

காவேரி மருத்துவமனை சார்பில் மாரத்தான் உயிர்தியாகம் செய்த முன்கள பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

திருச்சி, அக். 18: ஒவ்வொரு ஆண்டும் உலக இருதய தினத்தன்று இருதய ஆரோக்கியத்தை வலியுறுத்தி காவேரி மருத்துவமனை, CII மற்றும் YI இணைந்து மாரத்தான் நடத்துவது வழக்கம். இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக அரசு வழிகாட்டுதலின்படி எந்த ஒரு பொது நிகழ்ச்சியும் நடக்கவில்லை. மாறாக மெய்நிகர் (Digtal) நிகழ்ச்சிகளே பெரும்பாலும் நடந்தது. அவ்வாறே இந்தாண்டு கொரோனா தொற்றுக்காக போராடி மாண்ட முன்கள பணியாளர்களை கவுரவித்து உதவும் வகையில் காவேரி மருத்துவமனை மெய்நிகர் மாரத்தான் 2, 5, 10 மற்றும 21 கிலோ மீட்டர் பிரிவுகளில் செப்டம்பர் 29ம் தேதி ஆரம்பித்து அக்டோபர் 8ம் தேதி வரை நடந்தது. இந்த மாரத்தானில் ஒவ்வொரு வீரரும் கடக்கும் ஒவ்வொரு கி.மீ. தூரத்துக்கு ரூ.10 வீதம் காவேரி மருத்துவமனை சார்பில் உயிர்தியாகம் செய்த முன்கள பணியாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

இந்த மாரத்தானில் பங்குபெறும் நபர் தான் இருக்கும் இடத்திலிருந்து தங்களால் இயன்ற தொலைவு எங்கு வேண்டுமானாலும் அவர்கள் வசதிக்கேற்ப பங்கேற்க வகை செய்தது. 2 கி.மீ. பிரிவில் 1008 பேர், 5 கி.மீ பிரிவில் 1,748 பேர், 10 கி.மீ பிரிவில் 1,846 பேர், 21 கி.மீ பிரிவில் 994 பேர் பங்கேற்றனர். மொத்தமாக 5,596 பேர் பங்கேற்ற மாரத்தானில் 50,090 கி.மீ. தூரம் வெற்றிக்கரமாக பூர்த்தி செய்யப்பட்டது. காவேரி மருத்துவமனை அறிவித்தபடி 50,090 கி.மீ. தூரத்துக்கு ஈடாக ரூ.5,00,900 காசோலையை காவேரி மருத்துவமனை செயல் இயக்குனர் மற்றும் CII (திருச்சி மண்டலம்) அமைப்பு துணை தலைவர் டாக்டர் செங்குட்டுவன், CII (திருச்சி மண்டலம்) அமைப்பு தலைவர் வாசுதேவன், YI (திருச்சி மண்டலம்) அமைப்பு தலைவர் கேதன் வோரா, துணை தலைவர் காவேரி அண்ணாமலை ஆகியோர் இணைந்து இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் (IMA) அமைப்பு தலைவர் டாக்டர் குணசேகர், செயலாளர் டாக்டர் செந்தில்வேல் முருகன், பொருளாதார செயலாளர் டாக்டர் செந்தில்குமார், நுண்கலை செயலாளர் டாக்டர் திருப்பதியிடம் வழங்கினர்.

Tags : marathon workers ,families ,Kaveri Hospital ,
× RELATED தாய்ப்பாலூட்டும் இளம்பெண்ணுக்கு...