×

கோயிலில் பூஜை செய்வதில் இருதரப்பினர் மோதல்

தா.பேட்டை, அக். 18: தா.பேட்டை அருகே உள்ள கண்ணனூரில் அங்காள பரமேஸ்வரி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோயிலுக்கு காசிராஜன் என்பவர் அறங்காவலர் குழு தலைவராக உள்ளார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் இருதரப்பு அர்ச்சகர்களுக்கு இடையே கோயிலில் பூஜை செய்வதற்கு முறை மாற்றும் பிரச்னை ஏற்பட்டது. இதனால் அறங்காவலர் குழுத்தலைவர் காசிராஜனும், இவரது மகன் லெனின் என்பவரும் கோயிலை மூடி பூட்டு போட்டனர். இதனால் எதிர்தரப்பு பூசாரி ஓம்பிரகாஷ் என்பவரும் இன்னொரு பூட்டால் கோயிலை பூட்டி சென்றுள்ளார். 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் நேற்று முன்தினம் கோயிலை திறந்து ஓம்பிரகாஸ் பூஜை செய்துள்ளார். அப்போது அங்கு வந்த லெனின் பூஜை செய்து கொண்டிருந்த ஓம்பிரகாஷை தாக்கினார். பின்னர் இருவரும் தாக்கி கொண்டனர். இதுகுறித்து ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சம்பவத்தில் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (35), கண்ணன் (30) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கோயில் பகுதியில் தகராறு ஏற்படாமல் இருக்க போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Conflict ,parties ,
× RELATED கலெக்டர் அறிவிப்பு அரவக்குறிச்சியில்...