×

இருவர் கைது வைகை- குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்காக உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை

திருச்சி, அக். 18: காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்துக்காக திருச்சி மாவட்டத்தில் ரங்கம் வட்டத்துக்கு உட்பட்ட அம்மாப்பேட்டை, மாத்தூர், பாகனூர், அழுந்தூர், நாகமங்கலம், கொழுக்கட்டைகுடி, முடிகண்டம் ஆகிய 7 கிராமங்கள் வழியாக கால்வாய் அமைக்கப்படவுள்ளது. இந்த 7 கிராமங்களில் உள்ள பரப்பளவு 8.59 ஹெக்டர், புறம்போக்கு நிலங்கள் மற்றும் 127.89 ஹெக்டர் பரப்பு பட்டா நிலங்களும் 2013ம் ஆண்டு புதிய நிலமெடுப்பு சட்டத்தின்கீழ் கையகப்படுத்த அரசு ஆணையிடப்பட்டுள்ளது. காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு கால்வாய் கரூர் மாவட்டம் மாயனூரில் இருந்து திருச்சி வழியாக புதுக்கோட்டை மாவட்டம் வரை கால்வாய் அமைக்கப்படவுள்ளது. திருச்சி மாவட்டத்துக்கு மட்டும் நிலம் கையகப்படுத்துவதற்கு ரூ.97.41 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு நிலம் கையகம் தொடர்பாக திருச்சி அரியாறு வடிநில ஆற்று பாதுகாப்பு செயற்பொறியாளரிடமிருந்து நில திட்ட அட்டவணை பெறப்பட்டு நில அளவை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்துவதற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நில உரிமையாளர்களிடம் நேரடி பேச்சுவார்த்தை மூலம் நில கிரைய ஒப்பந்தம் செய்வது தொடர்பாக அம்மாபேட்டை மற்றும் மாத்தூர் கிராமங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களுடன் நேரடி பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. கலெக்டர் சிவராசு தலைமை வகித்தார். டிஆர்ஓ பழனிகுமார், ரங்கம் சார் ஆட்சியர் நிஷான் கிருஷ்ணன் உடனிருந்தனர்.

Tags : Vaigai ,owners ,acquisition ,land ,
× RELATED கடும் வெயிலால் வைகை அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவு