×

கலெக்டர் பங்கேற்பு மாநகர கமிஷனர் அதிரடி உத்தரவால்

திருச்சி, அக். 18: திருச்சி மாநகர காவல்துறையில் 14 சட்டம்- ஒழுங்கு 6 குற்றப்பிரிவு, 6 மகளிர் காவல் நிலையம், 2 மாநகர குற்றப் பிரிவு, 2 போக்குவரத்து காவல் நிலையம் உள்பட 30க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் உள்ளது. இதில் திருச்சி மாநகர காவல்துறை சார்பில் இருசக்கர வாகன ஆய்வு, பெட்டிகேஷ் உள்ளிட்டவை போலீசாரால் நடத்தப்படுகிறது. இதில் போலீசார் ஏனோ தானோ என தங்களது கடமையை மறந்து சட்டத்துக்கு புறம்பாக நடப்பது தெரியவந்தது. இதற்கிடையில் மாநகரில் இருசக்கர வாகனங்கள் திருட்டு சம்பவம் அதிகளவில் நடந்து வந்தது. இதில் கடந்த வாரம் 70க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை கைப்பற்றி திருவாருர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

இதற்கு முன்பாக திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒருவரை கைது செய்து 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதில் திருடப்படும் இருசக்கர வாகனங்கள் கிராமப்புற பகுதிகளில் எவ்வித ஆவணங்களின்றி விற்பனை செய்யப்படுவதாக குற்றவாளிகள் வாக்குறுதி அளித்ததின்பேரில் திருச்சி மாநகர கமிஷனர் லோகநாதன் உத்தரவு பிறப்பித்தார். அதில் போலீசார் ஏனோதானோ என பணியில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தினார். மேலும் திருச்சி மாநகர காவல் சோதனை பகுதியான 8 இடங்களில் போலீசார் அதிக கவனமுடன் இருக்கவும், பைக்கில் வருபவர்களை நிறுத்தி சோதனையிட்டு வண்டிக்கான உரிய ஆவணங்கள், இன்சூரன்ஸ், ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆதார் கார்டு ஆகியவை சரியாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே அவர்களே விடுவிக்க வேண்டும்.

இல்லையெனில் வண்டியை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்று உரிய ஆவணங்கள், ஆதார் கார்டு எடுத்து வரக்கூறி சரிபார்த்த பின்னரே வண்டியை விடுவிக்க வேண்டுமென உத்தரவிட்டார். இந்த உத்தரவையடுத்து திருச்சி கருமண்டபம் செக்போஸ்ட் எண் 1ல் இன்ஸ்பெக்டர் விக்டர் தலைமையில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் உரிய ஆவணங்களின்றி வந்த வாகன ஓட்டிகளிடம் ஆவணங்களை சரிபார்த்தனர். அப்போது ஆவணம் இல்லாதவர்களை எடுத்து வரக்கூறி சரிபார்த்தனர்.

திருச்சி, அக். 18: திருச்சி இபி ரோடு பூலோகநாதர் கோயில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. ஆட்டோ டிரைவர். இவர் தனது அத்தை மகளான தேவி (26) என்பவரை சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மாரிமுத்துவின் சித்தி மகன் ராஜ்குமார், போலீஸ் பணிக்காக விண்ணப்பித்துள்ளார். இதற்கு தயாராவதற்காக அவர் மாரிமுத்துவின் வீட்டில் தங்கி பயிற்சி பெற்று வந்தார். அப்போது தேவியுடன் நெருங்கி பழகியுள்ளார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி மாயமாகினர். எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாரிமுத்து நேற்று முன்தினம் அளித்த புகாரின்பேரில் கோட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்குப்பதிந்து இருவரையும் தேடி வருகிறார்.

இளம் பெண், வாலிபர் மாயம்: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அய்யம்பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி வன்னிமுத்து. இவரது மகள் பிரியதர்ஷினி (22). பட்டதாரியான இவர் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள கல்லூரியில் நூலக பணிக்கு விண்ணப்பிப்பதாக பெற்றோரிடம் கூறி விட்டு நேற்று முன்தினம் வீட்டை விட்டு சென்றார். அதன்பின் பிரியதர்ஷினி வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கோட்டை போலீசில் வன்னிமுத்து புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்குப்பதிந்து பிரியதர்சினியை தேடி வருகிறார்.

வாலிபர் மாயம்: திருச்சி உறையூர் கீழவைக்கோல்காரத்தெரு குளத்துசந்து பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் நித்யபிரகாஷ் (17). செல்போன் கடையில் வேலை பார்க்கிறார். கடந்த 8ம் தேதி வேலைக்கு சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின்பேரில் உறையூர் இன்ஸ்பெக்டர் மணிராஜ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார். வாலிபர் தற்கொலை: திருவெறும்பூர் மலைக்கோயில் அருகே உள்ள நொச்சிவயல் புதூரில் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் வாட்டர் சர்வீஸ் செய்யும் நிலையம் உள்ளது. இந்த வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷனில் ரவி என்பவர் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷனுக்கு வந்த உரிமையாளர் கதவை திறந்து பார்த்த பார்த்தபோது உள்ளே ரவி தூக்கில் தொங்கியவாறு இறந்து கிடந்தார்.

இந்த தகவல் கிடைத்ததும் திருவெறும்பூர் போலீசார் விரைந்து சென்று ரவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில் ரவி தனது குடும்பத்தை விட்ப் 15 வருடங்களாக பிரிந்து உறவினர் வீடான திருச்சி அண்டகொண்டான் தெருவில் வசித்து வந்துள்ளார். அங்கிருந்து தான் தினந்தோறும் பணிக்கு வந்தது தெரியவந்தது. மேலும் ரவி தனது உறவினர் கடந்த 10 நாட்களுக்கு முன் இறந்துள்ளார். இதில் மன உளைச்சலுக்கு ஆளான ரவி, கடந்த 2 நாட்களாக வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷனிலேயே தங்கி வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

டிரைவர் தற்கொலை: ரங்கம் கீழ அடையவளஞ்சான் தெருவை சேர்ந்தவர் சரவணன் (40). மாற்று டிரைவர். இவரது மனைவி ஹேமாவதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கொரோனாவால் சரவணனுக்கு போதிய வருமானம் இல்லை. இதனால் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் ஹேமாவதி கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்று விட்டார். இதனால் விரக்தியில் இருந்த சரவணன் நேற்று முன்தினம் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை சரவணன் இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ரங்கம் எஸ்ஐ கோபிநாத் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

Tags : Municipal Commissioner of Action ,
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி