போலீஸ் வேலைக்காக பயிற்சிக்கு வந்த வாலிபர் அண்ணியுடன் ஓட்டம் லால்குடி அருகே ரயிலில் அடிபட்டு பெண் பரிதாப சாவு

திருச்சி, அக். 18: லால்குடி தாலுகா அப்பாத்துறை ஊராட்சி தெற்கு சத்திரம் பகுதியை சேர்ந்த சாம்பசிவம் மனைவி நீலாவதி (55). விவசாய தொழிலாளி. இவர்களது மகள் சாந்தி (29) என்பவரை அருகில் உள்ள மேலவாளாடியில் திருமணம் செய்து கொடுத்திருந்தனர். இந்நிலையில் நேற்று பிற்பகல் 11.30 மணியளவில் தெற்கு சத்திரம் பகுதியில் இருந்து காய்கள் மற்றும் தின்பண்டங்களை வாங்கி கொண்டு மகளை பார்க்க மேலவாளாடிக்கு நீலாவதி சென்றார். அங்கு தண்டவாளத்தை கடந்து சென்றபோது சென்னையில் இருந்து திருச்சி வந்த எக்ஸ்பிரஸ் ரயில், நீலாவதி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாச்சலம் ரயில்வே போலீசார், நீலாவதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சமயபுரம் போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ஆமை வேகத்தில் குகை பாதை

மேலவாளாடியில் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி ரயில்வே நிர்வாகம் குகை வழிப்பாதை அமைத்து வருகிறது. இந்த பணி தற்போது ஆமை வேகத்தில் நடந்து வருவதால் மேலவாளாடி கிராம மக்கள், மளிகை சாமான்கள் மற்றும் பஸ் ஏறி செல்ல ரயில்வே தண்டவாளத்தை கடந்து தான் செல்ல வேண்டியிருக்கிறது. அப்படி மக்கள் அவசரகதியில் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் அஜாக்கிரதையாக செல்லும்போது இதுபோன்ற உயிர்ப்பலி ஏற்படும் சூழல் ஏற்படுகிறது. எனவே ரயில்வே குகைவழி பாதையை விரைவில் அமைத்து உயிர்பலியை தவிர்க்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More