திருவிசநல்லூர்  பஞ்சமுக மகா மங்கள பிரித்திங்கரா தேவி கோயிலில் பூச்சொரிதல் விழா

தஞ்சை, அக். 18: திருவிசநல்லூர்  பஞ்சமுக மகா மங்கள பிரித்திங்கரா தேவி திருக்கோயிலில் நேற்று பல்லாயிரக்கணக்கான தாமரை புஷ்பங்களால் எல்லாவிதமான மலர்களாலும் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. கொரோனா வைரசில் இருந்து நிவாரணம் அடைய வேண்டியும், அவரவர்கள் குடும்ப நலன் பெற வேண்டியும் சிறப்பு பூஜை நடைபெற்றது. தமிழகத்திலேயே எல்லாவிதமான நலன்களையும் வாரி வழங்கும் பஞ்சமுக மகா மங்கள பிரித்திங்கரா தேவி 9 அடி உயரத்தில் ஐந்து முகத்துடன் அமர்ந்த கோலத்தில் காவிரி வடகரையில் அமர்ந்த திருத்தலம் எல்லாவிதமான நலன்களையும் விளங்கும் திருத்தலம் ஆகும். நேற்று காலை 11 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் நிகும்பல யாகம் சிறப்பாக நடைபெற்றது. இந்த யாகத்தில் ஹோம பொருட்கள் எல்லா விதமான பழங்கள் பட்டுப் புடவை மிளகாய் யாகம் சிறப்பாக நடைபெற்றது.

அத்துடன் அம்மனுக்கு 16 விதமான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்று புஷ்பங்களால் பூச்சொரிதல் வைபவமும் நடைபெற்றது. பக்தர்கள் சமூக இடைவெளி கடைப்பிடித்து முக கவசம் அணிந்து அனைவரும் கூட்டு வழிபாடு செய்தனர். இவ்வழிபாட்டில் உபயதாரர்கள் ஆக குமார் அவர்கள் லலிதா  குமார் மற்றும் பல உபயதாரர்கள் பூஜையில் கலந்து கொண்டநர். ஆலய தர்மகர்த்தா கணேஷ்குமார் குருக்கள் பிரித்திங்கரா சுபாஷினி வழிபாட்டு குழு தலைவி  நந்தினி கணேஷ்குமார் குழுக்கள் கலந்து கொண்டனர். ஆலய விழாவில் உப்பிலி சிவம் யோகேஷ் பாலாஜி குருக்கள் வாசுதேவ சிவம் சிறப்பு வழிபாடுகளை செய்தனர். ஆலய வழிபாட்டு குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related Stories: