×

மௌண்ட் சீயோன் பொறியியல் கல்லூரிக்கு 5 நட்சத்திர அந்தஸ்து


புதுக்கோட்டை, அக்.18: புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (IIC 2018113600) மத்திய அரசின் கல்வித்துறை இன்ஸ்டியுசன்ஸ் இன்னோவேசன் கவுன்சில் இந்த ஆண்டிற்காக நடத்திய ஆய்வின் மூலம் 5 நட்சத்திர அந்தஸ்தை வென்றது. மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஐஐசியை 2018 - 2019 ம் ஆண்டு கல்லூரியில் நிறுவியது. இதன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கண்டுபிடிப்பிற்கான கலாச்சாரத்தை ஒழுங்கும் கிரமுமாக நிறைவேற்றி வருகிறது. அக்டோபர் 15, 2020 தேசிய இன்னோவேஷன் தினத்தன்று எம்.ஐ.சி மற்றும் ஏஐசிடிஇ யும் இணைந்து இந்த ஆண்டிற்கான கல்லூரிகளின் செயல்பாட்டை ஐஐசி 2.0 காலண்டர் ஆண்டிற்காக மதிப்பீடு செய்தது. மதிப்பிற்குரிய கல்வி அமைச்சர் டாக்டர் ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்’ மற்றும் திரு சஞ்சை ‘hம் ரோடோத்ரி, மினிஸ்டர் ஆப் ஸ்டேட், மினிஸ்ட்ரி ஆப் எஜுகேசன் (எம்.ஓ.இ) இந்த ஆண்டிற்கான பயிலகங்களின் மதிப்பீட்டை அறிவித்து பயிலகங்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்ய பல காரணிகளான இந்த ஆண்டு முழுவதும் நடைபெற்ற புதி சுய வேலை வாய்ப்புக்கான நிகழ்வுகள் கருத்தில் கொள்ளப்பட்டது.

மிகச் சிறந்த முறையில் செயல்பட்ட ஐ.ஐ.சி பயிலகங்களை பற்றியும், ஐஐசியின் 3.0 காலண்டர் சம்மந்தமான செயல்பாடுகள், நிகழ்வுகள், எச்.இ.ஐ 2020 - 2021 ஆண்டில் நிறைவேற்ற வேண்டிய செயல் திட்டங்கள் பற்றியும் அறிவிப்பு கொடுக்கப்பட்டது. மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் ஐஐசி அதன் சிறந்த செயல்பாட்டிற்காகவும், நிகழ்வுகளுக்காகவும் மிகச் சிறந்த மதிப்பீட்டை பெற்று 5 நட்சத்திர அந்தஸ்தை வென்றது. மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி 1700 பயிலகங்களோடு மதிப்பீடு செய்யப்பட்டதில் மிகச்சிறந்து செயல்படும் ஐ.ஐ.சி என தேசிய அளவில் தெரிவு செய்யப்பட்டது.

ஜெயபரதன் செல்லையா, தலைவர், மௌண்ட் சீயோன் கல்வி நிறுவனங்கள், திருமதி.பிளாரன்ஸ் ஜெயபாரதன், துணைத்தலைவர், மௌண்ட் சீயோன் கல்வி நிறுவனங்கள், இயக்குநர், டாக்டர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபாரதன், மற்றும் டாக்டர் பாலமுருகன், முதல்வர், மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியோர் ஐஐசி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் என்.ராதா மற்றும் அவர் குழுவினரை அவர்களது சிறந்த ஐஐசியிற்கான படைப்புகளுக்காவும், செயல்பாட்டிற்காகவும் மற்றும் வெற்றிக்காகவும் பாராட்டியுள்ளனர்.

Tags : Mount Zion College of Engineering ,
× RELATED கல்லூரியில் ஆண்டு விழா