×

வீரிய ஒட்டுவிதைகளின் மாதிரிகளை உரிய காலத்தில் பரிசோதனை செய்து முடிவுகளை வழங்க வேண்டும்

பெரம்பலூர், அக்.18: வீரிய ஒட்டு விதைகளின் மாதிரிகளை எவ்வித காலதாமத மும் இன்றி உரியகாலத் தில் விதை பரிசோதனை முடிவுகளை வழங்கிட வே ண்டும். பெரம்பலூர் விதை ப் பரிசோதனை நிலைய பணிகளை ஆய்வுசெய்த தஞ்சை மாவட்ட விதைப் பரிசோதனை அலுவலர் சிவ வீரபாண்டியன் வேளா ண் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்ட விதை பரிசோதனை அலுவலர் சிவ வீரபாண்டியன் பெரம் பலூரில் புதுபஸ்ஸ்டாண்டு அருகே இயங்கிவரும், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கான வி தைப்பரிசோதனை நிலையத்தை தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு மேற்கொண் டார். அப்போது விதை பரிசோதனை நிலைய உபகரணங்கள் நல்ல நிலையில் இயங்குகிறதா எனவும், விதைகளின் தரத்தை அறி ந்திட முளைப்புத்திறன், ஈர ப்பதம், சுத்ததன்மை மற்றும் பிற ரகக் கலப்பு,ஆகியவை இங்கு பரிசோதனைகள் செய்யப் படுகிறதா என முறையாக ஆய்வுசெய்து, இப்பகுதி விவசாயிகளு க்கு உரிய காலத்தில் வி தைகள் கிடைத்திட பகுப் பாய்வு முடிவுகள் வழங்கப் படுகிறதா எனவும் நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது, பெரம்பலூர், அரிய லூர் மாவட்டங்களில் மானாவாரிப் பயிர்களான வீரியஒட்டுரக மக்காசோளம் மற்றும் பருத்திப் பயிர் கள் அதிகப் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக பயன்படுத்தப்படும் வீரிய ஒட்டு விதைகளின் மாதிரிகளை எவ்வித காலதாமதமும் இன்றி உரியகாலத்தில் விதைப் பரிசோதனை முடிவுகளை வழங்கிட வேண்டும். நெல், உளுந்து பயறு வகை பயிர்கள், நிலக்கட லை எண்ணை வித்துப்பயிர்கள் மற்றும் இதர பயி ர்களின் விதைமாதிரிகள் தரமானதாகவும் விவசாயிகளுக்கு காலதாமதம் இன்றி வழங்கிடவேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது, திருச்சி மண்டல விதைப் பரிசோதனைஅலுவலர் லீமாரோஸ், விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் கள் ராஜேந்திரன் மற்றும் தயாமதி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags :
× RELATED விளை பொருட்கள் விலை குறைப்பதை...