×

அரியலூரில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

அரியலூர், அக்.18: இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு விழா அக்கட்சியினரால் கொண்டாடபட்டு வருகிறது. இதையொட்டி அரியலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய அலுவலகத்தில் அக்கட்சியின் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து துணைக்குழு உறுப்பினர்களுக்கு கட்சி அறிமுகம் என்னும் தலைப்பில் வகுப்பு நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் அருணன் உள்ளிட்ட ஏராளமான கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags : celebration ,Ariyalur ,
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...