மனஅழுத்தம் போக்க காவலர்களுக்கு யோகா பயிற்சி

மயிலாடுதுறை, அக்.18: மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, செம்பனார்கோவில், பெரம்பூர், பாலையூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காவல்துறையினருக்கு கொரோனா தொற்று ஒழிப்பு பாதுகாப்பு பணி மற்றும் பல்வேறு பணிகளின்போது மனஅழுத்தத்தை போக்குவதற்கான யோகா பயிற்சி நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாதா உத்தரவின்பேரில் மயிலாடுதுறை டிஎஸ்பி அண்ணாதுரை முன்னிலையில் நேற்று காலையில் யோகா பயிற்சி நடைபெற்றது. இதில் தியான பயிற்சி, சித்தாசனம், தடாசனம், பவன முகத்சனம், பர்வதாசனம், மகா முத்ராசனம், யோக முத்திரை பயிற்சி உள்ளிட்ட யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மயிலாடுதுறை காவல் உபகோட்டத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கலந்துகொண்டு யோகா பயிற்சி பெற்றனர்.

Related Stories:

>