×

மருத்துவ படிப்பில் ஓபிசிக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி மத்திய அரசை கண்டித்து விசிக போராட்டம்

மயிலாடுதுறைஅக்.18: மருத்துவ படிப்பில் ஓபிசிக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அவசர சட்டம் இயற்ற வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மயிலாடுதுறையில் விசி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் ஒன்றிய அமைப்பாளர் மோகன்குமார் தலைமை தாங்கினார். போராட்டத்தில் மணடல பொறுப்பாளர் வேலுகுண வேந்தன், பொறியாளர் அணி மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் தமிழர் தேசிய முன்னணி மாவட்ட தலைவர் பேராசிரியர் முரளிதரன், திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட தலைவர் இளையராஜா, தமிழர் உரிமை மீட்பு சுப்புமகேஷ் ஆகியோர் சமூக நீதி கொள்கைக்கு எதிராக நடத்தப்பட்ட 1147 வங்கி அதிகாரிகளுக்கான தேர்வை ரத்து செய்ய வேண்டியும், மருத்துவ படிப்பில் ஓபிசிக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் முன் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். சீர்காழி: சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் காமராஜ், சீர்காழி சட்டமன்ற தொகுதி செயலாளர் தாமு இனியவன், மாநில விவசாய அணி செயலாளர் மோகனரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி நகர செயலாளர் இனிய தமிழன் வரவேற்றார்.

Tags : protests ,government ,
× RELATED கர்நாடகாவுக்கு வறட்சி நிவாரணம்...