×

வெங்கமேடு எஸ்பி காலனி பிரிவு பகுதியில் மழை நீர் தேங்கி சுகாதார சீர்கேடு

கரூர், அக். 18: கரூர் வெங்கமேடு எஸ்பி காலனி பிரிவுப் பகுதியோரம் மழைநீர் தேங்கியுள்ளதால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருகின்றன. கரூர் வெங்கமேடு பகுதியின் நுழைவு வாயில் பகுதியில் இருந்து வாங்கப்பாளையம் வரை சாலையின் இருபுறமும் அதிகளவு வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இதில் எஸ்பி காலனி பிரிவுச் சாலையோரம் உள்ள நிழற்குடை பகுதியில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை எப்போது மழை வந்தாலும் மழைநீர் குளம் போல தேங்கி நின்று பல்வேறு சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தி வருகிறது. பல ஆண்டுகளாக இந்த பிரச்னை இந்த பகுதியில் நிலவி வருகிறது. தண்ணீர் தேக்கம் காரணமாக, கொசு உற்பத்தி முதல் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் இந்த பகுதியில் ஏற்பட்டு வருகிறது.
எனவே, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பு, இந்த பகுதியில் தண்ணீர் தேங்காத வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags : area ,Venkamedu ,SP Colony ,
× RELATED ஒட்டன்சத்திரத்தில் சாலையில் தேங்கியிருந்த மழைநீர் அகற்றம்