×

பணியில் இருந்த போது இறந்த தொழிலாளி குடும்பத்திற்கு உதவித்தொகை

திருப்பூர், அக்.18:  திருப்பூரில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் ராஜபாளையத்தை சேர்ந்த கருப்பசாமி (29) என்பவர் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். நிறுவனம் அவரை இ.எஸ்.ஐ. திட்டத்தில் பதிவு செய்திருந்தது. பணியின் போது ஏற்பட்ட உயிரிழப்பு என்பதால், இ.எஸ்.ஐ. அந்த உயிரிழப்பை பணியினால் ஏற்பட்ட விபத்தாக அங்கீகரித்தது. இதனால் கோவை இ.எஸ்.ஐ. சார் மண்டல அலுவலகத்தின் துணை இயக்குனர் (பொறுப்பு), அவரது குடும்பத்தினருக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க உத்தரவிட்டார்.

அதன்பேரில், கருப்பசாமியின் பெற்றோருக்கு மாதந்தோறும் சுமார் ரூ.4,700 (பணமதிப்பை பொருத்து அவ்வப்போது உயர்த்தி வழங்கப்படும்) வாழ்நாள் முழுவதும் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இ.எஸ்.ஐ. கிளை (திருப்பூர்) மேலாளர் திலீப், தனியார் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரிகளின் முன்னிலையில் கருப்பசாமியின் தாயாருக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார். நாள் ஒன்றுக்கு ரூ.153 வீதம், அவரது தாயாருக்கு மாதந்தோறும் சுமார் ரூ.4,700 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என கிளை மேலாளர் திலீப் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், காசாளர் ஜெகதீஸ்வரன் மற்றும் அலுவலக ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED அமைச்சர் முன்னிலையில் பாஜவினர் 100 பேர்...