×

வேளாண் சட்டத்தை எதிர்த்து காங்கிரசார் சார்பில் கையெழுத்து இயக்கம்

ஊட்டி,அக்.18: வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் எதிர்கட்சிகள் மற்றும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஊட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கைெயழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. மாவட்ட தலைவர் மற்றும் எம்.எல்.ஏ.,வுமான கணேஷ் தலைமை வகித்தார். பொது செயலாளர் ரவிக்குமார், சிறுபான்மை பிரிவு தலைவர் ஜாகீர், ரகு, கோபி, மேலூர் நாகராஜ் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இதில், ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கலந்துக் கொண்டு கையெழுத்திட்டனர். மஞ்சூர்:வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து மஞ்சூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் விவசாயிகளிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப் பட்டது. நீலகிரி மாவட்டம் குந்தா வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட மசோதாக்களை கண்டித்தும், மசாதாக்களை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் மத்தியில் கையெழுத்து இயக்கம் நேற்று நடத்தப்பட்டது.
மஞ்சூர் பஜார் பகுதியில் நடந்த நிகழ்சியில் குந்தா வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் நேரு, ஊட்டி சட்டமன்ற கட்சி பொறுப்பாளர் நாகராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு விவசாயிகளிடம் கையெழுத்து பெற்றனர்.

Tags : Congress ,
× RELATED வங்கிக் கணக்கு முடக்கத்தால் நிதிச்...