×

கோயில், வீடுகளில் கொலு வைக்கும் நிகழ்ச்சி குறைந்தது

ஊட்டி,அக்.18:  ஆண்டு தோறும் நவராத்திரி நாட்களில் வீடுகள் மற்றும் கோயில்களில் கொலு பொம்மைகள் வைப்பது வழக்கம். இந்த பூஜைக்கு பலரையும் அழைப்பது வழக்கம். குறிப்பாக, பெண்கள் அதிகளவில் இந்த விழாவில் கலந்துக் கொள்வார்கள். நீலகிரி மாவட்டத்திலும், கோயில்கள் மற்றும் வீடுகளில் இது போன்ற கொலு வைப்பது வழக்கம். இம்முறை கொரோனா பாதிப்பு காரணமாக பெரும்பாலான கோயில்களில் வழக்கமாக நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், நேற்று நவராத்திரி துவங்கிய நிலையில் பெரும்பாலான ேகாயில்கள் மற்றும் வீடுகளில் பெண்கள் கொலு பொம்மைகள் வைத்து பூஜை செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான கோயில்கள் மற்றும் வீடுகளில் கொலு பொம்மை வைக்கும் நிகழ்ச்சி நடக்கவில்லை. கொரோனா பாதிப்பு காரணமாக இம்முறை கொலு நிகழ்ச்சி நடத்தப்படவில்லை என கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags : killing spree ,temples ,homes ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு