×

2021 தேர்தலில் அதிமுக 65 சதவீத வாக்கு பெறும் துணை சபாநாயகர் பேட்டி

பொள்ளாச்சி,அக்.18:  2021-ல் நடக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக 65 சதவீத வாக்கு பெறும் என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார். பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டியில் நேற்று நடந்த, அதிமுக 49வது ஆண்டு துவக்க விழாவில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நிருபர்களிடம் கூறியதாவது: எம்ஜிஆர், ஜெயலலிதா வழி நடத்தி வந்த அதிமுகவிற்கு எத்தனை தேர்தல் வந்தாலும் வாக்கு வங்கி குறையாது. மக்கள் ஆதரவு இருப்பதால், வரும் 2021ம் ஆண்டு நடைபெறம் சட்டமன்ற தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பெற்று மீண்டும் அதிமுக அமோக வெற்றிபெறும்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும், மருது சகோதரர்கள் போல் உள்ளனர். அத்திக்கடவு அவினாசி திட்டம், ஆனைமலையாறு நல்லாறு திட்டம், குடிமராமத்து திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா காலத்திலும் ஓய்வில்லாமல் தொடர்ந்து மக்கள் சேவையாற்றினார். அதிமுகவின் சேவை தொடர்வதால், வரும் தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Tags : AIADMK ,elections ,
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...