×

பசுமை நகரை உருவாக்கும் முயற்சியில் தி சென்னை சில்க்ஸ்  குமரன் தங்கமாளிகை

கோவை, அக். 18 : கோவை கிராஸ்கட் ரோடு தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்க மாளிைகயில்,  மரங்களை பேணி காக்க வாடிக்கையாளர்களுக்கு விதைப்பந்து வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வினை அக்ஷ்யா விக்ரம் நாராயண் துவக்கி வைத்தார். இது குறித்து  தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்க மாளிைக நிர்வாகி ஒருவர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1530 கோடி மரங்கள் பூமியிலிருந்து மறைகின்றன. அதே சமயம் ஒவ்வொரு ஆண்டும் 500 கோடி மரங்கள் மனித முயற்சியாலும் இயல்பாகவும் வளருகின்றன.  ஓராண்டில் இழப்பு என்பது சுமார் 1030 கோடி மரங்கள். எனவே வாடிக்கையாளர்களுக்கு விதைப்பந்துகளை வழங்குகிறோம். அவர்கள் விதைப்பந்துகளை பயன்படுத்தி மரங்களை வளர்த்து இயற்கையை காக்க  முயற்சிக்க வேண்டும். இதனால் நகரம் பசுமையாகும், என்றார்.

Tags : Chennai Silks ,city ,Kumaran Gold House ,
× RELATED சினிமா ஸ்டண்ட் நடிகர் வீட்டில் திருட்டு