×

முன்னாள் அமைச்சர் தலைமையில் அதிமுக., 49ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்

பெருந்துறை,அக்.18: ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க கழகத்தின் 49ம் ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு முன்னாள் அமைச்சரும், தோப்பு வெங்கடாச்சலம்  தலைமையில் பெருந்துறை அண்ணா சதுக்கத்தில் அ.தி.மு.க., கட்சிக்கொடியை ஏற்றி வைத்து எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எம்.ஏ., கே.எஸ்.பழனிச்சாமி, ஒன்றிய கழக செயலாளர்கள் பெருந்துறை விஜயன், ஊத்துக்குளி சி.டி.ரவிச்சந்திரன், சி.எம்.எஸ் துணை தலைவர் டி.டி.ஜெகதீஸ், ஊத்துக்குளி ஒன்றிய கழக துணை செயலாளர் ஈ.எம்.ஆர்.மூர்த்தி, பெருந்துறை ஒன்றியக்குழு தலைவர் சாந்தி ஜெயராஜ், பெருந்துறை ஒன்றியக்குழு துணை தலைவர் உமா மகேஷ்வரன், பேரூர் கழக செயலாளர்கள் கல்யாணசுந்தரம், கே.எம்.பழனிச்சாமி, சீதப்பன், ஈ.என்.பெரியசாமி, கமலக்கண்ணன், துரைசாமி, திருப்பூர் புறநகர் மாவட்ட கழக இணை செயலாளர் மணிமேகலை, ஊராட்சி தலைவர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்கள், வார்டு கழக செயலாளர்கள், கிளை கழக செயலாளர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள், கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags : AIADMK ,inauguration ceremony ,
× RELATED அதிமுகவை கைப்பற்ற அமித்ஷா முயற்சியா? அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி