×

வனத்துறை ஜீப் டிரைவர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கு முக்கிய குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

ஈரோடு,அக்.18: ஈரோடு  மாவட்டம் சத்தியமங்கலம் அரியப்பம்பாளையம் செங்குந்தர் நகரை சேர்ந்தவர்  சஜீவன் (41). சத்தி வனச்சரக அலுவகத்தில் ஜீப் டிரைவராக பணியாற்றி வருகிறார்.  இவர் கடந்தமாதம் 8ம் தேதி இரவு அவரது வீட்டிற்குள் புகுந்த 9பேர் கும்பல் சஜீவன் மற்றும் அவரது குடும்பத்தை தாக்கி காயப்படுத்தி 13  பவுன் நகை, ரூ.70 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது. இது குறித்து சஜீவன் அளித்த புகாரின் பேரில், சத்தியமங்கலம் போலீசார்  வழக்குப்பதிந்து, 9பேர் கொண்ட கும்பலை கைது செய்து  சிறையில் அடைத்தனர். இந்த கொள்ளை சம்பவத்திற்கு சத்தியமங்கலம்  வடக்குபேட்டை தண்டுமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த  பிரகாஷ் (25), மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. இவரையும் போலீசார் ஏற்கனவே  கைது செய்தனர். இதேபோல் பிரகாஷ் மற்றொரு  கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, பிரகாசை  குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி, ஈரோடு எஸ்.பி.,  தங்கதுரை, கலெக்டர் கதிரவனுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில்,  கலெக்டர் கதிரவன் உத்தரவின் பேரில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள  பிரகாஷ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தகவல் தெரிவிக்கப்பட்டது.

Tags : Forest Department ,
× RELATED நெல்லை அருகே கிணற்றுக்குள் விழுந்த கரடியை மீட்க வனத்துறை தீவிரம்