×

நன்னடத்தை மீறிய வாலிபருக்கு சிறை

புழல்: செங்குன்றம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர்  சகில் அகமது(22). இவர் மீது கஞ்சா வழக்கு உள்பட 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஆண்டு மாதவரம் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் முன்பு சகில் அகமது ஆஜராகி திருந்தி வாழப்போவதாகவும், இனி எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டேன் என நன்னடத்தை உறுதிமொழிப் பத்திரம் எழுதிக்கொடுத்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் சகில் அகமது  மீண்டும் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டதற்காக செங்குன்றம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, நன்னடத்தை விதி மீறி குற்றச்செயலில் ஈடுபட்ட சகில் அகமதுவை சிறையில் அடைக்க துணை ஆணையர் உத்தரவிட்டார். அதன்பேரில், சகில் அகமது புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

Tags : teenager ,
× RELATED 15 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம்...