பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி அதிரடி கைது

சென்னை, அக். 16: பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடியை போலீசார் கைது செய்தனர். சிந்தாதரிப்பேட்டை என்.என் காலனி எப் பிளாக்கை சேர்ந்தவர் சஞ்சய். ரவுடியான இவர் சிந்தாதரிப்பேட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் கடந்த 10ம் தேதி 21 வது பிறந்தநாளை கிழக்கு கூவம் சாலையில் நண்பர்களுக்கு மது விருந்து அளித்து பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சுரேஷ் என்பர் புகார் அளித்தார். இதன்படி ரவுடி சஞ்சய், கணேஷ் (22), பாலாஜி (19) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். டிபி சத்திரத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்பரை போலீசார் தேடி வருகின்றனர்.  நடுரோட்டில் கத்தியால் கேக் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Related Stories:

>